இங்க நிறைய பேர் இதை ரொம்ப மேலோட்டமா புரிஞ்சுக்கிட்டு எதிர்க்குறாங்க. கலப்பு திருமணம் வேற. சாதி மறுப்பு திருமணம் வேற.

வேற வேற சாதிய சார்ந்த இரண்டு பேர் காதலிச்சு கல்யாணம் பண்ணுறாங்க அப்படினு வச்சுப்போம். ரெண்டு பேருமே சாதிய மறுக்காம, சாதி குடுக்குற அந்தஸ்துகளை உணராம, சாதிய சடங்குகளை உள்ளடக்கிய திருமணமா பண்ணுறாங்க அப்படினா அது வெறும் கலப்பு திருமணம் மட்டும் தான். கல்யாணம் பண்ண போற ரெண்டு பெரும் ஒரே படிநிலை சாதிய சேர்ந்தவங்கனா, வீட்டுல ஒத்துக்க வைக்குற பிரச்னை மட்டும் தான் இருக்கும். வேற வேற படிநிலைனா, அதுல யாரோடது ஆதிக்க சாதியோ அவங்க பண்பாடு சடங்குகள் எல்லாம் இன்னொரு சாதிய ஆக்கிரமிச்சுடும். இது வெறும் திருமணம் ஓட நிக்காது. தொடர்ந்து அவங்க வாழ்க்கைல நடக்குற எல்லா சுப துக்க நிகழ்வும், ஏதோ ஒரு சாதிய சடங்கு வழிமுறை எல்லாம் உள்ளடக்கி தான் இருக்கும். அவங்களுக்கு பிறக்கிற பசங்களுக்கும் இது கடத்தப்படும். சாதிய பத்தின எந்த தெளிவும் இல்லாம, அது எவ்வளவு வன்முறையானதுனு புரியாம இன்னொரு தலைமுறை உருவாகி தான் வரும். இந்த சம காலத்துலயும், கலப்பு திருமணம் எதிர்ப்பு இருக்க தான் செய்யுது. அதையும் மீறி போராடி கல்யாணம் பண்ணுறது பெரிய விஷயம் தான்.

ஆனா அது உங்க காதலுக்கான போராட்டம் மட்டும் தான். அத தவற, இது முற்போக்கான சமூகம் அப்படினு சொல்லவோ, இதுனால மட்டும் சாதி ஒழிஞ்சுடும்னு சொல்லவோ முடியாது. ரொம்ப கொஞ்ச அளவு நீர்த்து வேணா போகும். இதுவே சாதி மறுப்பு திருமணம்னா, ரெண்டு பேரும் மனதார சாதிய பிளவுகள, அது குடுக்குற சவுகரியங்கள, அத சுத்தி இருக்குற சடங்கு வழிமுறைகள எல்லாம் தொடர்ந்து முடிஞ்ச வரைக்கும் எதிர்க்குற ஆளா இருக்கணும். இதெல்லாம் ரொம்ப active ஆ எதிர்த்தாலும், அது குடுக்கற அந்தஸ்து ஏதோ ஒரு வகையில நமக்கு அனுகூலம் குடுக்குதுனு புரிஞ்சு இருக்கணும். அடுத்த தலைமுறைக்கு அந்த சாதிய புத்திய கொஞ்சம் கூட கடத்தாம இருக்கணும். “no-caste” சான்றிதழ் வாங்குறேன்னு சொல்லிக்கிட்டு இருக்க கூடாது. சாதி இல்லாத சமூகம் உருவாக அவங்க சுற்றம் அளவுல மட்டுமாது முயற்சி செஞ்சுட்டே இருக்கணும். சுய சாதி பற்றோ போற்றுதலோ மனசு அளவுல கூட இருக்க கூடாது. இதெல்லாம் பண்ணுற சாதி மறுப்பு திருமணம் தான் கொஞ்சமாவது சாதிய ஒழிக்க உதவும்

நிற்க.

கலப்பு திருமணம்/சாதி மறுப்பு திருமணம் பண்ணுற தலித்துகள ஆணவ கொலை பண்ணுற சமூகமா தான் இப்பவும் இருக்கோம். அதுக்கு அரசு தரப்புல பெருசா சட்ட பாதுகாப்பு இல்லாதப்போ தைரியமா இதை எல்லாம் செய்ய முடியாது தான். ஆனா அதே சமையம், சாதி மறுப்பு திருமணமே வேணாம், எங்களுக்கு உள்ளயே காதலிச்சு திருமணம் செஞ்சுக்குறோம்னு சொல்லுறது நியாயமா வேணா இருக்கலாம். ஆனா சரியானது இல்ல.

குடும்ப அமைப்புல ஒரு தனி சாதிய அடையாளமா தனித்து போறத விட, சாதிய மறுக்குற இணையற தேடி கரம் பிடியுங்கள். கட்டாயம் சாதி மறுப்பு திருமணம் தான் பண்ணனும்னு சொல்லல. ஆனா அதன் மேல நம்பிக்கைய இழக்காம இருக்க முயற்சி செய்யுங்க. காதல் மேலயும் நம்பிக்கை இழக்காது இருங்கள்.

ஜெய் பீம் 💙